அப்பா என்பது அழகான குடும்பத்தின் தலைவர் Dad's poem
எத்தனை உறவுகள் இருந்தாலும் அப்பா இல்லாத வாழ்க்கை வெறுத்து போகிறது... அம்மா
எம்மை கருவில் பத்து மாசம் சுமப்பவள் அப்பா கருவறை இன்றி எம்மை என்றுமே நெஞ்சில் சுமந்து கொண்டுருப்பவர் என் அப்பா...
வலிகளை தாங்கும் இதயம் அப்பா தன் சந்தோசத்தை இழந்து குழந்தைகளை சந்தோசமா வைப்பவர்...
அப்பாவின் அன்பு வானத்தைப் போன்று எட்டவும் முடியாது தொடவும் முடியாது...
அப்பாவின் அன்பால் என்றும் தோற்று விட மாட்டம் எந்த நிலையிலும் சாதனை படைத்துக்கொண்டே இருப்போம் அப்பாவின் அன்பால்!
சாப்பிட்டாலும் சாப்பிடு என்று சொல்லும் ஒரே உறவு அப்பா என்னுயிறுக்கும் மேலானவர் என் அப்பா...
எத்தனை கஸ்டம் தாண்டி உழைத்து எம்மை காக்கும் தெய்வம் என் அப்பா மழை,வெயில் பார்க்காமல் உழைத்துக் கொண்டே இருப்பவர்... என்னுடைய அப்பா
அப்பா எனும் நிழலில் இருக்கிறேன் என்றும் வெயில் என்னை தாக்கியதில்லை...
என் அம்மாவும் நீதான் என் நண்பனும் நீதான் என் சக உறவும் என் உயிர் அப்பா...
அம்மா நடத்தி என்னை கொண்டு போவாள் என் அப்பா என்னை சுமந்து தூக்கி செல்வார் என்றும் அப்பாவிற்கு எந்த உறவும் ஈடாகாது.