நிழல் போன்ற நண்பர் & A friend like a shadow
கெட்டுப்போக வைப்பது நட்பு அல்ல நல்லதை சொல்லி கொடுப்பது உண்மையான நட்பு...
எதையும் எதிர்பார்ப்பது நட்பு அல்ல எதையும் விட்டு கொடுப்பது தான் நட்பு ஒருவரின் நட்பில் குற்றம் காணாமல் உணர்ந்து கொள்வதே நட்பு.
எம்மில் மிகப்பெரிய வலிகள் இருந்தாலும் கூட மறைந்து விடும் நம்மைச் சுற்றி நல்ல நண்பர்கள் இருப்பதால்.
எப்போதும் எச் சந்தர்ப்பத்திலும் கடைசி வரைக்கும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதே உண்மையான நட்பாகும்.
உண்மையான நட்புக்கு காசு,பணம் ஏதும் தேவையில்லை உண்மையான அன்பு ஒன்றே போதும்...
சூரியன் காலையில் உதயமாகும் என்பது போல நிலா இரவில் என்பது போல நட்பு என்பது உயிர் பிரியும் வரை.
நட்புக்குள் சண்டை போட்டு பேசாமல் இருந்தாலும் இன்னொருத்தர் எம்மிடம் சண்டை பிடித்தால் முதலில் நிற்பவன் உண்மையான நண்பன்...!
உலகம் சுழலும் வரைக்கும் நம் நட்பு தொடரும் சுழல்வது நின்றால் நம் நட்பும் நின்றுவிடும்?
நட்பு என்பது நம் சந்தோசத்தில் கூட இருப்பது போல் நாம் படும் துயரத்தில் கூட துணையாக நிற்பது உண்மையான நட்பு ஆகும்.
எம் வாழ்வில் விலைமதிக்க முடியாத சொத்து நம்மிடமுள்ள உண்மையான நண்பர்கள் மட்டுமே!
Next new update Coming