A love affair between a 🐆tiger and a small 🐈 cat.

0

புலிக்கும், ஒரு சிறிய பூனைக்கும் இடையே மலர்ந்த பாசப் போராட்டம்.

besttaup story free

ஒரு அடர்ந்த காட்டில் புலி வாழ்ந்து வந்தது.அதன் கர்ஜிக்கும் சத்தம் கேட்டாலே காடு அதிர்ந்து விடும். அதே கிராமத்தில் 'மணி' என்ற ஒரு சிறிய பூனை வளர்ந்து வந்தது.ஒரு தடவை கிராமத்து நாய்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய "மணி"வழி தவறி காட்டுக்குள் புகுந்தது.

புலி பசியோடு இருந்தது.புதருக்குள் ஏதோ அசைவதைக் கண்டு பாய்ந்தது.அங்கே கண்டது ஒரு சிறிய பூனையை கண்டு பரிதாபம் அடைந்தது.சிறிய பூனை புலியின் காலடிக்கு சென்று உரசியது. புலிக்கு பூனை மீது இனை பிரியா பாசம் ஏற்பட்டது.பூனைக்கு பாதுகாப்பை புலி வழங்கியது.புலி வேட்டையாடி விட்டு வரும்போது, மிச்சமிருக்கும் சிறு துண்டுகளைப் பூனைக்காக விட்டுச் சென்றது.சில நாள் சென்ற பின் புலி வேட்டைக்குச் செல்லும் இடமெல்லாம் பூனையும் அதன் பின்னால் ஓடியது. பூனை நின்றால் புலி காத்திருக்கும். காட்டில் வாழும் மற்ற விலங்குகள் புலியையும் பூனையையும் உடைய பாசத்தைக் கண்டு வியந்தது.

புலிக்கும் பூனைக்கும் ஒரு பாச போராட்டம் என்று மற்ற விலங்குகள் பேசிக்கொண்டது. ஒரு நாள் காட்டில் பலத்த மழை பெய்தது. காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மணி என்ற அந்தப் பூனை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.புலிக்கு நீச்சல் தெரிந்தாலும் அந்த வெள்ளத்தில் பூனையைக் காப்பாற்றுவது கடினமாக இருந்தது.

பூனை ஒரு மரக்கிளையை பிடித்துக் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.புலி தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ஆற்றுக்குள் குதித்தது.புலி தன் வாயால் பூனையைப் மென்மையாகக் கவ்விப் பிடித்துக் கொண்டு கரைக்கு வந்தது. தாய்க்கு தன் பிள்ளை மீது இருக்கும் பாசமாக இருந்தது.

அன்று புலியின் கண்களில் தெரிந்தது தாய்க்கும் மேலான பாசம்.சில நாட்கள் செல்ல செல்ல புலிக்கு மணி காட்டில் வாழும் விலங்கு அல்ல அது மனிதர்களிடம் வீட்டில் வாழ வேண்டிய செல்லப் பிராணி என்று யோசனை ஏற்பட்டது.

ஆனால் மணியை பிரிய புலிக்கு மனமில்லை இதுதான் உண்மையான பாசப் போராட்டம். ஒரு நாள் இறுதியில் பாசம் வென்றது.புலி அந்த பூனையை கிராமத்திற்கு அழைத்து சென்றது.கிராமத்து மக்கள் வருவதைக் கண்டதும் புலி பின்வாங்கியது.மணி புலி அண்ணனை விட்டு போக மனமில்லாமல் திரும்பி திரும்பிப் பார்த்தது.புலி ஒரு முறை மென்மையாக உருமி, "போய்விடு" என்று சொல்வது போலப் பார்த்தது. மணி கிராமத்திற்கு சென்று கொண்டிறுந்தது.

புலி அங்கயே அமர்ந்து கொண்டு பூணை போகும் வழியை பார்த்துக் கொண்டுயிருந்தது.உருவத்தில் பெரியது புலி என்றாலும், அந்தச் சிறிய பூனையின் அன்பு அதன் முரட்டுத்தனமான இதயத்தையே மாற்றிவிட்டது.பாசம் என்பது உருவத்தையோ இனத்தையோ பார்ப்பதில்லை.உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் வலிமைக்கு வேலையில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.