அம்மாவின் பாசத்திற்கு ஏங்கும் ஒரு பெண்
தாயின் கைகளில் இருந்து துழைந்து போன குழந்தை போல் அம்மாவின் பாசத்துக்கு ஏங்கும் குழந்தையில் நானும் ஒன்று.
என் மனதுக்கு அமைதி வேண்டும் என நினைப்பேன் ஆனால் கடல் அலைக்கு என்றும் அமைதி இல்லை அதே போன்றது என் மனமும்.
பல கனவுகள் நனவாக மாறாதா என்று காத்திருந்து காத்திருந்து கனவாகவே காலங்கள் கடக்கின்றன.கனவு நினைவாகும் வரை காலத்தை கடப்போம்.
உன் கருவறையில் அன்று நான் வெளிச்சமில்லா இருட்டில் தனிமையில் அமர்ந்து இருந்தேன்..
மீண்டும் உன் கருவறைக்கே சென்றுவிட ஆசை!வெளியே உள்ள உலகம் என்னைப் பயமூட்ட வைக்கிறது என் தாயே...
பொய்கள் பேசத் தெரியாத என்னை,இந்த உலகம் ஏற்க மறுக்கிறது!மீண்டும் ஒரு முறை உன் மகளாய் பிறக்கவா?இல்லை உன் மடியில் மரணிக்கவா?
ஆயிரம் ஆசைகள் உண்டு உண்ணோடு பேச நான் பேசும் பேச்சைக் கேக்க நீ விரும்புவாயா அம்மா!
என் மீது ஈடு இனையின்றி என் மீது பாசம் வைக்க நான் ஏங்கி தவிக்கிரன் என் தாயே!..உன் மடி என்பது உலகில் தலைசிறந்த தலையனையாகும்.
தாய் என்பது பல வலிகளை மறக்க செய்யும் மருந்து.என் ஏக்கம் என்பது எவ்வளவு நீர் குடித்தாலும் தீராத தாகம் இப்படிக்கு உன் பாசத்திற்கு ஏங்கும் மகள்...
