🐘The Ant That Taught the Elephant a Lesson | Children's Fable |சிறு பிள்ளைகளின் கதை

0
🐘யானைக்கு பாடம் புகட்டிய 🐜எறும்பு
The ant that taught the elephant a lesson

முன்னொறு காலத்தில் ஒரு அடர்ந்த காட்டில் பெரிய யானை ஒன்றும் சிறு எறும்பு கூட்டமும் வாழ்ந்து வந்தது நான் தான் காட்டிலே பெரியவன்,பலசாலி என்று அது மற்ற விலங்குகளைத் துன்புறுத்தி வந்தது.தினமும் காலையில் எறும்புகள் உணவு தேடி வரிசையாகச் செல்வது வழக்கம். அப்போது அந்ந யானை வேண்டுமென்றே தன் தும்பிக்கையில் தண்ணீரை உறிஞ்சி எறும்புகள் மீது தண்ணீரை ஊற்றும் "ஏய் சின்ன எறும்பு பயலே! உன்னை காலால் மிதித்தால் ஒரே நொடியில் நசுங்கிவிடுவாய்,"என்று எறும்பை பார்த்து யானை ஏளனமாகச் சிரித்தது. பாவம், அந்தச் சின்னஞ்சிறு எறும்பு அமைதியாகச் சென்றது. ஒருநாள் யானைக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று அந்த எறும்பு முடிவு செய்தது. மறுநாள் யானை நன்றாகச் சாப்பிட்டுவிட்டு ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தது. இதுதான் சந்தர்ப்பம் என்று எறும்பு மெதுவாக யானையின் தும்பிக்கைக்குள் புகுந்தது. உள்ளே சென்ற எறும்பு, யானையின் மென்மையான சதையை பலமாக கடிக்கத் தொடங்கியது. வலியால் துடித்துப் போன யானை, பிளிறிக் கொண்டே எழுந்தது. தும்பிக்கையை ஆட்டிப் பார்த்தது, ஆனால் எறும்பு பிடியை விடவில்லை. "யாரோ உள்ளே புகுந்து விட்டார்கள் தயவுசெய்து வெளியே வாருங்கள், வலி தாங்க முடியவில்லை!" என்று யானை அழுதுகொண்டே கெஞ்சியது. எறும்பு சிறுது நேரம் கழித்து வெளிய வந்தது.தன் தப்பை உணர்ந்த யானை "என்னை மன்னித்து விடு எறும்பே, உன் உருவத்தை வைத்து உன்னைக் கேலி செய்தேன். இன்று நீ எனக்கு ஒரு பாடம் புகட்டிவிட்டாய்," என்று வருந்தியது. அவர்களின் உருவத்தை வைத்து ஒரு போதும் குறைத்து மதிப்பிட கூடாது. உருவத்தில் சிறியவர்களாலும் பெரிய செயல்களை செய்ய முடியும்..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.