சுறுசுறுப்பா எறும்பும் கர்வமுள்ள சிங்கமும் ஒரு காட்டில் வாழ்ந்தது வந்தது அக் காட்டின் பெயர் 'அமைதி வனம்' என்ற அழைக்கப்படும்.அக் காட்டில் ராஜாவாக 'வீரபாண்டி' எனும் சிங்கம் வாழ்ந்து வந்தது. "இந்தக் காட்டில் என்னை விடப் பெரியவன் எவனுமில்லை" என்று அது எப்போதும் கர்ச்சித்துக் கொண்டே இருக்கும்.அதே காட்டில் ஒரு பெரிய ஆரச மரத்தின் அடியில் ஆயிரக்கணக்கான எறும்புகள் வாழ்ந்து வந்தன.அவற்றின் தலைவன் வரிசையாகச் சென்று உணவைச் சேகரிக்கும்.
அவை பார்ப்பதற்கு மிகச் சிறியதாக இருந்தாலும், தங்களுக்குள் மிகுந்த ஒற்றுமையுடன் இருந்தன.ஒரு நாள், வெயில் அதிகமாக இருந்ததால் சிங்கம் வீரபாண்டி அந்த அரச மரத்தின் நிழலில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தது.அப்போது, எறும்பு சுறுசுறுப்பும் அதன் நண்பர்களும் உணவைத் தூக்கிக்கொண்டு சிங்கத்தின் கால் அருகே சென்றன.ஒரு எறும்பு தவறுதலாகச் சிங்கத்தின் மூக்கின் மீது ஏறிவிட்டது.தூக்கத்தை விட்டு எழுந்த சிங்கம் பயங்கரமாகக் கர்ச்சித்தது.
"யார் அது? என் தூக்கத்தைக் கலைக்கத் துணிந்த அந்தச் சிறு உயிர் எது?" என்று கேட்டது.எறும்பு சிங்கத்தின் முன்னால் வந்து , "மன்னிக்கவும் மன்னா! நாங்கள் உணவு தேடிச் சென்றபோது தெரியாமல் உங்கள் மீது ஏறிவிட்டோம்" என்றது.சிங்கம் ஏளனமாகச் சிரித்தது. "நசுக்கினால் செத்துப்போகும் ஒரு சிறு எறும்பு எனக்கு மன்னிப்பு கேட்கிறாயா? உன்னால் எனக்கு என்ன பயன்? போ... ஓடிப்போ! இல்லையென்றால்
என் காலால் உன்னை நசுக்கிவிடுவேன்" என்று மிரட்டியது.
அதற்கு எறும்பு, "மன்னா, உருவத்தில் நான் சிறியவன் தான். ஆனால், ஆபத்துக் காலத்தில் ஒரு சிறு துரும்பும் கூடப் பயன்படும். என்றாவது ஒரு நாள் நான் உங்களுக்கு உதவுவேன்" என்றது. சிங்கம் மீண்டும் பலமாகச் சிரித்துவிட்டுத் தூங்கச் சென்றது.
சில வாரங்கள் கடந்தன. ஒரு நாள் வேடர்கள் சிலர் அந்தக் காட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் சிங்கத்தைப் பிடிப்பதற்காக ஒரு பெரிய வலையை மறைத்து வைத்திருந்தனர். வீரபாண்டி சிங்கம் பாவம்,எதையும் கவனிக்காமல் அந்தப் பாதையில் வரும்போது, திடீரென அந்தப் பெரிய வலையில் சிக்கிக்கொண்டது.
சிங்கம் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த வலையை அறுக்க முடியவில்லை.அதன் பலம் அந்த வலையிடம் பலிக்கவில்லை.யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்!" என்று சிங்கம் பயத்தில் கத்தியது. அதன் சத்தம் கேட்டு காட்டில் இருந்த மற்ற விலங்குகள் பயந்து ஓடின.சிங்கத்தின் அவலக் குரல் எறும்பு சுறுசுறுப்பின் காதுகளில் விழுந்தது. அது உடனே தன் படைகளை அழைத்தது. "நண்பர்களே! நம் காட்டின் ராஜா ஆபத்தில் இருக்கிறார். அவர் நம்மை ஏளனம் செய்தாலும், அவரைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. வாருங்கள்!" என்று கட்டளையிட்டது.
ஆயிரக்கணக்கான எறும்புகள் விரைந்து சென்றது.சிங்கத்தின் மேல் உள்ள வலையை எறும்புகள் கூட்டங்கள்வலையின் நூல்களைத் தங்கள் கூர்மையான பற்களால் கடிக்க ஆரம்பித்தன. சில நிமிடங்களிலேயே வலையில் ஒரு பெரிய ஓட்டை விழுந்தது. சிங்கம் மெதுவாக வெளியே வந்தது.
வேடர்கள் வருவதற்குள் சிங்கம் தப்பி பொந்துக்குள.மறைந்தது.எறும்புகளும் பாதுகாப்பாகத் தங்களின் இருப்பிடத்திற்குச் சென்றது.மறுநாள் எறும்பை சந்திக்க சிங்கம் அரச மரத்தடிக்கு சென்றது.சிங்கத்தைப் கண்டு எறும்புகள் பயந்தது.ஆனால் சிங்கம் பணிவாகக் குனிந்து, "எறும்பே, என்னை மன்னித்துவிடு. அன்று உன்னை ஏளனம் செய்தேன். ஆனால் இன்று உன் உதவியால்தான் நான் உயிரோடு இருக்கிறேன். பலத்தை விட புத்தியும் ஒற்றுமையுமே சிறந்தது என்பதை உணர்ந்தேன்" என்றது.
அன்று முதல் சிங்கமும் எறும்பும் சிறந்த நண்பர்களாயின.
