Cooking tips

0

ஒரு சுவையான சிக்கன் தம் பிரியாணி செய்வதற்கான இளகுவான முறையை பார்க்கலாம்.  



பிரியாணி சமைப்பதற்கு தேவையான பொருட்கள்

1) சமைத்தல் முறை: பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 10-20 நிமிடங்கள் சமையல் எண்ணெய் 2 தேக்கரன்டி ஊற்றி ஊற விடவும்.சிக்கனுடன் தயிர் சேர்த்து,இஞ்சி பூண்டு விழுது,2மிளகாய்,மிளகாய் தூள்,உப்பு தேவையான அளவு சேர்த்து 30நிமிடம் ஊற விடவும்.  

• கடினமான பாத்திரத்தை எடுத்து எண்ணெய் அல்லது நெய் உற்றவும்.பின்னர் பட்டை, கிராம்பு, ஏலக்காய்,வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பின்னர் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து வதக்கி பிரியாணி மசாலா சேர்க்கவும்.1 கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும்.தண்ணீர் கொதிக்கும்போது ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்க்கவும்.தண்ணீர் நன்றாக கொதி வந்து தண்ணீர் வற்றிய நிலையில் மூடி விட்டு அடுப்பை மிக குறைந்த தீயில் 10-20 நிமிடம் தம் போடவும். தம் போட்ட பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி அரிசி உடையாமல் இருக்க மெதுவாக கரண்டியால் கிளறவும்.அதன் பின் குடும்பத்தோடு இருந்து தம் பிரியாணியை ரசித்து ருசித்து சந்தோசமாய் உண்ணலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.