ஒரு ஆற்றின் ஓரத்தில் ஒரு பேராசை கொண்ட முதலை வாழ்ந்து வந்தது.அதே ஆற்றில் அழகான வாத்தும் ஒன்று வசித்து வந்தது.அந்த வாத்தைச் சாப்பிட வேண்டும் என்று நீண்ட நாள் கனவு பேராசை கொண்ட முதலைக்கு. முதலை வாத்தை
சாப்பிடுவதற்கு திட்டம் தீட்டியது.ஒரு நாள் வாத்திடம் பேச தொடங்கியது முதலை. “வாத்து நண்பனே, ஆற்றின் அந்தப் பக்கம் சுவையான மீன்களும், அழகான தாமரை மலர்களும் இருக்கின்றன. என் முதுகில் அமர்ந்து கொள்கிறாயா? உன்னை அந்த பக்கம் அழைத்துச் செல்கிறேன்,”என்று கேட்டது.முதலையின் திட்டத்தை வாத்து உணர்ந்து கொண்டது.வாத்து பயப்புடாமல் யோசனை போட்டது வாத்து சொன்னது என்னுடைய சுவை மிகுந்த 'இதயம்' இப்போது என்னிடம் இல்லை. அதை உலர்த்துவதற்காகக் ஆற்றங்கரையில் இருக்கும் ஒரு மரப்பொந்தில் வைத்துவிட்டு வந்துவிட்டேன். இதயம் இல்லாமல் என்னைச் சாப்பிட்டால் உனக்கு ருசியாக இருக்காது. நாம் ஆற்றங்கரைக்குத் திரும்பினால் அதை எடுத்துக்கொண்டு வருகிறேன்," என்று அமைதியாகக் கூறியது.முதலை நாம் ஏமாற போகிறம் என்று தெரியாமல் பேராசை முதலை வாத்தை சாப்பிட போரோம் என்று ஆசையாய் நினைத்து சொன்னது."அப்படியா? அப்படியானால் சீக்கிரம் ஆற்றங்கரைக்கு நடப்போம்," என்று வாத்தை மீண்டும் ஆற்றங்கரைக்கே அழைத்துச் சென்றது. ஆற்றங்கரை வந்தவுடன் வாத்து பட்டென்று மேலே பறந்து மரத்தின் உச்சிக் கிளையில் அமர்ந்து கொண்டது.கடைசியில் ஏமாந்தது பேராசை முதலை."ஆபத்து வரும்போது பயப்படாமல் பதட்டமடயாமல் புத்தியைப் பயன்படுத்தினால் எத்தகைய எதிரியிடமிருந்தும் தப்பிக்கலாம்.
